ஈசி ஜெட் என்ற விமானம் லண்டனில் இருந்து கிரீஸ்சில் உள்ள கோஸ் சர்வதேச விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.. விமான புறப்பட்ட 2 மணி நேரத்தில் விமானத்தில் பயணித்த நபர் ஒருவர் குடிபோதையில் விமானத்தில் ரகளையில் ஈடுபட்டுள்ளார்.

அந்த போதை நபர் விமானத்தில் பணிபுரியும் பணியாளர்களிடம் மற்றும் சக பயணிகளிடமும் போதையில் பிரச்சனை செய்துள்ளார். ஆகாயத்தில் பறந்து கொண்டிருந்த விமானத்தில் இவ்வாறு இந்த நபர் நடந்து கொண்டது பயணிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியது. மேலும் அந்த விமானத்தின் கேப்டனை திட்டியதுடன், எமர்ஜென்சி டோரை ஓப்பன் செய்ய துணிந்து உள்ளார். இதனைத் தொடர்ந்து அந்த விமானம் முனீஜ் சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

இந்நிலையில் அந்த போதையில் இருந்த ஆசாமியை சக பயணி ஒருவர் தடுத்து நிறுத்தி மற்ற பயணிகளையும் பாதுகாப்பான நிலையில் வைத்திருந்தார். இறுதியில் அந்த நபர் போலீசார் உதவியுடன் முனீஜ்ல் இறக்கி விடப்பட்ட நிலையில் கைதட்டலுடன் ஆரவாரம் செய்து பயணிகள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவிய நிலையில் பரபரப்பு ஏற்படுத்தியது.

மேலும் இதுபோன்ற சம்பவங்கள் அரிதாக இருந்தாலும் அதனின் தீவிரத்தை உணர்ந்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதே எங்களுடைய முன்னுரிமை என்று ஈசிஜெட் நிறுவனம் கூறியுள்ளது மேலும் இதுபோன்ற தவறுகள் நடக்கும் பட்சத்தில் நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்றும் நிர்வாகம் கூறியுள்ளது.

மேலும் விமானத்தில் உள்ள மீதமுள்ள பயணிகள் முனிச் விமான நிலையத்தில் இறக்கிவிடப்பட்டு அத்துடன் அவர்களுக்கு ஹோட்டல் மற்றும் உணவு தங்குமிடங்கள் அனைத்தும் வழங்கப்பட்டதாகவும் அவர்களுக்கு தேவையான எல்லா வசதிகளும் விமான நிறுவனம் செய்து கொடுத்துள்ளது. மேலும் இதுபோன்ற சம்பவங்களுக்கு தங்களுடைய வருத்தத்தை நிறுவனம் தெரிவித்துள்ளது. இதனை தொடர்ந்து அடுத்த நாள் விமானம் கிரீஸ்க்கு தனது பயணத்தை தொடர்ந்தது.

“>