அமெரிக்காவின் டென்வர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட யுனைடெட் எயர்லைன்ஸ் விமானம், புறப்படும் நேரத்தில் பறவை ஒன்றை மோதி அதன் எஞ்சின் தீப்பற்றியதால் பரபரப்பான சூழ்நிலையை உருவாக்கியது. இந்த சம்பவம் வார இறுதியில் நடந்ததாக தேசிய விமானப் பாதுகாப்பு நிறுவனம் (FAA) தெரிவித்துள்ளது.

கனடா நோக்கி புறப்பட்ட யுனைடெட் எயர்லைன்ஸ் பிங் 737-800 விமானத்தில் 153 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் இருந்தனர். சம்பவத்தின் போது விமானத்தில் பயணித்தவர்கள் அலறி கத்தும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

 

விமானத்தின் வலது பக்க எஞ்சினில் ஒவ்வொரு சில விநாடிகளுக்கும் தீ பிடித்து வெடிக்கின்றன என விமான பைலட்டுகள் ரேடியோ மூலம் தகவல் தெரிவித்துள்ளனர். விமானம் உடனடியாக அவசரமாக தரையிறக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பாதிப்பில்லாமல் மீட்கப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக FAA விசாரணை நடத்தி வருகிறது. விமானங்கள் பறக்கும் போது விலங்குகள், குறிப்பாக பறவைகள் தாக்கும் சம்பவங்கள் அமெரிக்காவில் 2023 ஆம் ஆண்டு மட்டும் 20,000 முறை பதிவாகியுள்ளது.