
தமிழகத்தில் விளைச்சல் பாதிப்பு காரணமாக தற்போது தேங்காய் விலை அதிகரித்துள்ளது. கடந்த மாதம் வரையிலும் தேங்காய் விலை சீராக இருந்த நிலையில் தற்போது வரத்து குறைவால் விலை ஏறுமுகத்தில் உள்ளது.
அதன்படி சென்னையில் உள்ள மொத்த விற்பனை சந்தைகளில் தேங்காய் கிலோவுக்கு 15 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. இதனால் ஒரு கிலோ தேங்காய் 50 ரூபாய் வரையில் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சிலரை விற்பனையில் தேங்காய் கிலோ ₹70 வரைக்கும் விற்பனை ஆவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.