
சென்னை மாவட்டத்தில் உள்ள அண்ணா நகரில் indirect taxes and customs என்ற பெயரிடப்பட்ட பலகையோடு நின்ற காரின் கதவை நபர் ஒருவர் திடீரென திறந்தார். இதனை கவனிக்காமல் சைக்கிளில் வந்தவர் கார் கதவின் மீது வேகமாக மோதி கீழே விழுந்துள்ளார்.
அந்நேரத்தில் பின்னிருந்து வந்த மற்றொரு கார் கீழே விழுந்து கிடந்த நபர் மீது ஏறி இறங்கியது. இதனால் சைக்கிளில் வந்த அந்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த அண்ணா நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.அதன் பின் விபத்து குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.