ADMK கழக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டம் Ops தலைமையில் நடைபெற்றது. இதில் பேசிய ஓ.பன்னீர்செல்வம், இந்த இயக்கம் தொண்டர்களின் இயக்கம். தொண்டர்கள் தான் கழகத்தினுடைய பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்படனும்,  அந்த சட்ட விதியை மாற்றுவதற்கு எந்த கொம்பனாலும் முடியாது என்ற விதியை கொண்டு வந்தார்கள். இதெல்லாம் அவங்க கழகத்தினுடைய தலைமை பொறுப்பிற்கே வந்தவர்கள் செய்கின்ற அவமரியாதை.

நம்மை வளர்த்தவர்கள், நம்மை சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களாக உருவாக்கியவர்கள், அமைச்சராக உருவாக்கியவர்கள். ஒரு சாதாரண தொண்டன் கூட முதலமைச்சராக வர முடியுமென்ற இந்த கழகத்தை பக்குவமாக கொண்டு சென்றவர்கள். ஒரு தொண்டன் கூட கழகத்தின்  உற்ற பற்ற பதவிக்கு வர முடியும் என்று நம்மையெல்லாம் பக்குவமாக வளர்த்தவர்கள். அந்த வளர்த்தவர்களுக்கு நம்மை ஆளாக்கியவர்களுக்கு, துரோகம் செய்கின்ற நிலைதான் இப்பொழுது இருக்கிறது. இந்த நிலை நீடிக்கலாமா? நீடிக்கலாமா? நீடிக்கலாமா? நீடிக்க கூடாது.

அதற்காகத்தான் நாம் இன்று தமிழ்நாடு முழுவதும், மாவட்டம் தோறும், கழகத் தொண்டர்களே….தொண்டர்களே….. உங்களுடைய உரிமையை பறித்த நாசகார கும்பலுக்கு சரியான பாடம் புகட்டுங்கள் என்று சொல்வதற்காக தான் நாங்கள் இன்றைக்கு வந்திருக்கிறோம். அந்த போராட்டம் உணர்வு பூர்வமான போராட்டம். நாங்கள் கொங்கு மண்டலத்தில் சென்று எட்டு மாவட்டங்களில், வருவாய் மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்திட்டு வந்திருக்கிறோம். இன்று நீங்கள் எவ்வாறு எந்த அளவுக்கு ஆதரவோடு,  உணர்வுபூர்வமாக உற்சாகமாக இங்கே கலந்து கொண்டு சிறப்பித்துக் கொண்டிருக்கிறீர்களோ….

அதே போல கொங்கு மண்டலமே…. முழுவதும் நூற்றுக்கு நூறு சதவீதம் நம்மளுக்கு ஆதரவு நிலையை எடுத்துருக்கிறார்கள் என்பதனை நான் பணிவோடு தெரிவித்துக் கொள்ள கடமைப்பட்டுருக்கிறேன். பொதுவாகவே, கொங்கு நாட்டில் இருப்பவர்கள் அனைவரும் கொங்கு நாட்டு தங்கங்களாக தான் மின்னி கொண்டு இருக்கிறார்கள். சரி அது இருக்கட்டும். இப்ப நாம்  நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருகிறோம். நாடாளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கி இருக்கின்ற நாம், உச்ச நீதி மன்றம் வரை சென்று சட்ட விதிக்கு போராடிக் கொண்டிருக்கிறோம். வழக்கு வருகின்ற காரணத்தினால், நாம் எந்த காலத்திலும் தனிக்கட்சி என்ற நிலை இல்லை. சில யூகங்கள் அடிப்படையில் சில பேர் எழுதிக் கொண்டு இருக்கின்றார்… பேசிக் கொண்டிருக்கிறார். அந்த நிலை ஏற்கனவே நாங்கள் அறிவித்து விட்டோம் என தெரிவித்தார்.