
தெலுங்கானாவில் பிரனீத்(32) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனியார் ஊழியர் ஆவர். இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மேட்சல் ராம் பள்ளியில் உள்ள மைதானத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்காக தனது நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்போது கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும்போது திடீரென அவர் சரிந்து விழுந்தார்.
இதையடுத்து அங்கிருந்த அவரது நண்பர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். அதோடு மருத்துவர்கள் செய்த பரிசோதனையில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.