தமிழகத்தில் காவல்துறை வேலைக்காக தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக ஆட்கள் தேர்வு செய்யப்பட்டு வருகிறது. இதன் தலைவராக ஓய்வு பெற்ற டிஜிபி சுனில் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அதிமுக வழக்கறிஞர் இன்பதுரை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுவை தாக்கல் செய்தார். அதில் தேர்வாணைய தலைவர் பதவி நியமனம் குறித்து எந்த விதியும் முறையாக இல்லை என்றும், ஆனால் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு சுனில் குமார் தலைவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டது.

சுனில் குமார் தலைவராக செயல்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, இதற்கு பதில் அளிக்க மத்திய மற்றும் மாநில அரசுக்களுக்கும், சுனில் குமாருக்கும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து வழக்கை நவம்பர் 11ம் தேதி ஒத்தி வைத்தது. ஆனால் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு பட்டியலிடவில்லை. இதையடுத்து நீதிபதி பவானி சுப்பராயன் முன்பு மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது அப்போது பதில் மனு தாக்கல் செய்யப்பட்டு விட்டதா? என்று கேள்வி கேட்ட நீதிபதி, வழக்கை பட்டியலிடுவது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்று கூறினார்.

இருப்பினும் மனுதாரர் தரப்பில் தொடர்ந்து நீதிபதியிடம் வலியுறுத்தப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த நீதிபதி நியமிக்கப்பட்ட நபர் தகுதி இல்லாதவராக இருந்தால் மட்டுமே தலையிட முடியும். இல்லையென்றால் அரசின் முடிவில் எவ்வாறு தலையிட முடியும் என்று கேள்வியை எழுப்பினார். இதையடுத்து இந்த வழக்கை உடனடியாக விசாரிக்கவில்லை என்றால் வானம் இடிந்து விழுந்து விடாதே என்று குறிப்பிட்டார். இதைத்தொடர்ந்து அரசியல் அனைத்திற்கும் சாயம் பூச வேண்டாம் என்றும் கூறினார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.