அமெரிக்கா கலிபோர்னியாவில் ஜோசப் பிராண்டன் கெர்ட்வில் என்பவர் அவரது குடும்பத்தினரோடு அப்பகுதியில் வசித்து வருகிறார். இந்நிலையில் இவர் அவரது பெற்றோரை கொடூரமான முறையில் கொலை செய்து அவர்களது தலையை துண்டித்துள்ளார். இதைத் தொடர்ந்து அவர் அவர்கள் வளர்த்த நாயையும் கொலை செய்ததுடன் வீட்டில் பணிபுரிந்து கொண்டிருந்த ஊழியரையும் கடுமையாக தாக்கியுள்ளார்.

அதன்பின் அவர் பெற்றோரை கொலை செய்யப்பட்டது தொடர்பாக கிராபிக்ஸ் போட்டோவை அவர்களது உறவினருக்கு அனுப்பியுள்ளார். இதை பார்த்த அவரது உறவினர்கள் அதிர்ச்சியடைந்ததுடன்

இதுகுறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அவரது வீட்டிற்கு விரைந்து சென்று அவரை பிடிக்க முயன்ற போது அவர் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதைத்தொடர்ந்து அவரை பின் துரத்திய காவல் துறையினர் சாலையின் இரண்டு புறமும் அவரை சுற்றி வளைத்தனர். அப்போது ஆயுதங்களை கீழே போட்டு விட்டு அவரை சரணடைய காவல்துறையினர் கேட்டுக்கொண்டனர். அதற்கு அவர் ” நாங்கள் உங்களை விரும்புகிறேன். மன்னித்துக் கொள்ளுங்கள் நீங்கள் சாகப் போகிறீர்கள்” எனவும் அதன்பின் அவர் என்னை சுட்டு வீழ்த்தி விடுங்கள் எனவும் காவல்துறையினரிடம் கெஞ்சு உள்ளார்.

இதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவரை கைது செய்ததுடன் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை வழங்கி வருகின்றனர். மேலும் காவல்துறையினர் இச்சம்பவம் பற்றி வழக்கு பதிவு செய்ததுடன் விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்‌.