
இரண்டு நாட்களாக துருக்கியில் ஏற்பட்ட ஐந்து நிலநடுக்கங்களுக்கு மத்தியில் அதன் இடிபாடுகளுக்கு அடியிலிருந்து பிறந்த குழந்தையின் காணொளி இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இடிபாடுகளில் தனது தாய் மற்றும் தந்தையை இழந்த குழந்தை பிறந்து உயிர் தப்பியதால் அக்குழந்தையை அனைவரும் அதிசய குழந்தை என்று அழைக்கிறார்கள். துருக்கி மற்றும் சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் ஆயிரக்கணக்கான உயிர்கள் பலியாகி உள்ளன. மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில் இடிந்து விழுந்த கட்டிட இடுபாடுகளுக்கு அடியில் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் குழந்தையின் பெற்றோர் உயிருடன் மீட்க முடியாததால் அனாதையாக விடப்பட்டுள்ளது என கூறப்படுகின்றது. புதிதாக பிறந்த பெண் குழந்தை மற்றும் அதன் குடும்பத்தை பற்றிய விவரங்கள் அறியப்படவில்லை.
Syria : After the earthquake, a pregnant lady gives birth to a baby under the collapse building. People heard the crying sound, it ws a baby girl. Baby's placenta was still attached with mother who has passed away. Sadly she was only survivor in family.#TurkeySyriaEarthquake pic.twitter.com/0zHSa5kzvt
— Pankaj Mishra (@nn_pankaj) February 8, 2023
Miracle!❤️👏🏼After 37 hours, a 5-year-old girl was rescued from the rubble in #Turkey.🇹🇷#TurkeyEarthquake #PrayForTurkey #TurkeySyriaEarthquake #زلزال #زلزال_سوريا_تركيا #تركيا pic.twitter.com/x9qSdNZwGw
— iنsaaan (@in_saaaaaan) February 8, 2023