பெங்களூர் ஜே.பி நகரில் அபிஷேக் கவுடா என்பவர் வசித்து வருகிறார். இவர் ராமநகர் மாவட்டம் கனகபுரா பகுதியைச் சேர்ந்தவர். இவர் பட்டப்படிப்பை பாதியின் நிறுத்தியுள்ளார். அதோட தனது குடும்ப பிரச்சனையால் மனைவி மற்றும் குழந்தைகளை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் 1ம் வகுப்பு முதல் SSLC வரை மாணவ, மாணவிகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுத்து வந்தார்.

அவரது டியூசனில் கனகபுராவில் வசிக்கும் தம்பதியின் 15 வயது மகளும் படித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்து ஆண்டு நவம்பர் 23ம் தேதி டியூஷனுக்கு வந்த மாணவியுடன் அபிஷேக் வீட்டை விட்டு ஓடினார். இதுகுறித்து அந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின்படி மாணவியை காவல்துறையினர் தேடி வந்தனர். 44 நாட்கள் கழித்து அபிஷேக் காவல்துறையினரிடம் சிக்கினார். அதாவது அவர் மாணவியுடன் தப்பிய ஓடிய, பின்னர் செல்போன் மற்றும் ஏடிஎம் கார்டு பயன்படுத்தவில்லை. இதனால் காவல்துறையினருக்கு அவரை கண்டுபிடிப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து காவல்துறையினர் அவரது போட்டோவை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி தேடினார்கள். இந்நிலையில் அவர் மண்டியா மாவட்டம் மலவள்ளியில் ஒரு வாடக வீட்டில் தங்கி இருப்பது தெரிய வந்தது.

இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்து மாணவியை மீட்டு காவல் துறையினர் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல காப்பகத்தில் சேர்த்தனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்திய போது அபிஷேக் மாணவியுடன் வெறும் 70 ஆயிரம் ரூபாய் பணத்துடன் ஓடிப்போன நிலையில், செல்போன் ஏடிஎம் கார்டு பயன்படுத்தாமல் வாழ்ந்து வந்துள்ளார். வீட்டின் உரிமையாளர் சந்தேகப்பட்டு இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததால் சிக்கி உள்ளார்.