
சென்னையில் பூட்டிய வீட்டுக்குள் வந்த திருடன் கையும் களவுமாக பிடிபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது சென்னை முகப்பேர் பகுதியில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அமைந்துள்ளது. இந்த குடியிருப்பு பகுதியில் உள்ள ஒரு வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த திருடன் நேற்று திருடுவதற்காக சென்றுள்ளான்.
அப்போது பூட்டை திருடன் உடைத்த நிலையில் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வெளியே வந்து பார்த்தனர். அந்த திருடன் வீட்டுக்குள் நுழைவதை அறிந்த அவர்கள் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அந்த தகவலின் படி காவல் துறையினர், மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். அவர்கள் வருவதை பார்த்த வாலிபர் வீட்டின் அறையில் இருந்த ஒரு கட்டிலுக்கு அடியில் ஒளிந்து கொண்டார். பின்னர் தீயணைப்பு துறையினர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றனர்.
இதைத்தொடர்ந்து கட்டிலுக்கு அடியில் பதுங்கியிருந்த திருடன் பிடிபட்டார். அவரை கைது செய்த காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் பெயர் பாலமுருகன் என்றும், அவர் மீது ஏற்கனவே பல வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.