
சவுதி அரேபியாவில் உள்ள ஜாஷான் நகர் உள்ளது. இதில் சாலை விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து ஜெட்டாவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது, உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எங்களுடைய ஆழ்ந்த இரங்கல்கள். ஜெட்டாவில் உள்ள இந்திய தூதராக அதிகாரிகள் தேவையான உதவிகளை செய்து கொடுப்பார்கள். காயமடைந்தவர்கள் விரைந்து குணமடைய வேண்டுகிறோம்.
இந்த சம்பவம் குறித்த தகவலை தெரிந்து கொள்வதற்கு உதவி எண்களை வெளியிட்டுள்ளோம் என்று குறிப்பிட்டு இருந்தனர். இது குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது, இந்த விபத்தில் இந்தியர்கள் உயிரிழந்ததை அறிந்து வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருக்கும் இந்திய தலைமை அதிகாரியிடம் நான் பேசினேன். அவர் தேவையான முழு உதவியும் செய்து கொடுப்பார் என்று கூறினார்.