
மதிமுகவின் மதுரை மண்டல நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று பேசிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ, நான் படிக்கும் காலத்தில்… திமுகவில் இணைந்து கட்சி பணிகளை செய்த போது ஒரு நாள் இதே திண்டுக்கல்லில் இருந்து ஒரு அமைச்சர் வரப்போகிறார்கள் என்று சொன்னார்கள்… அவர் வரவில்லை என்பதனாலே கலைஞர் அவர்களும் அன்னியார் தயாளு அம்மையார் அவர்களுக்கு என்று ஒதுக்கப்பட்ட ரயிலின் இருக்கையில் அமர்ந்தார்கள்.
துக்கம்:
தீடிரென திண்டுக்கல் மந்திரி வந்துவிட்டார். வரமாட்டேன் என்று சொன்னவர் வந்துவிட்டார். அவர் அப்படி வந்ததுதன் காரணமாக ரயில்வே அதிகாரிகள் வந்து சொன்னார்கள். மந்திரி வந்துவிட்டார், நீங்கள் மாறி நாலு படுக்கை இருக்கக்கூடிய அந்த இடத்திற்கு கலைஞர் அவர்களை போக சொல்லுங்கள் என்றார். அவரிடம் நான் சொல்ல மாட்டேன். அவர் துணைவியாரோடு உள்ளே இருக்கிறார். தூங்கிக் கொண்டிருக்கிறார். நான் நிச்சயமாக சொல்ல மாட்டேன் என்றேன்…
சட்டம் போட்டார்கள்:
இவர்கள் மந்திரியிடம் போய் சொன்னார்கள். ஆனால் அந்த மந்திரி நான் போனால் அந்த பெட்டியில் தான் போவேன் என்று சொன்னார். கூட்டம் கூடிவிட்டது. ரயில் போகவில்லை. அங்கே இருப்பவர்களிடம் சொன்னேன். எல்லோரும் சத்தம் போட ஆரம்பித்தார்கள். நான் தனியாக செல்ல வேண்டும் என்று தானே மந்திரி சொல்கிறார். இந்த நான்கு படுக்கைகள் இருக்கக்கூடிய அந்த பெட்டியிலேயே ஒருவர் தூங்கிக் கொண்டிருக்கிறார். ஒரு வெளிநாட்டுக்காரர் என்று நான் நினைத்தேன். அவரை போய் தட்டி எழுப்பினேன்.
எங்களுடைய தலைவர்:
ஆங்கிலத்திலே கேட்டார். உங்களுக்கு என்ன வேண்டும் ? என்னை ஏன் எழுப்புகிறாய் என்று கேட்டார். ஒரு உதவி வேண்டும். நான் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கிறேன். எங்களுடைய தலைவர்… இந்த நாட்டின் முதலமைச்சர் மட்டுமல்ல. நாடு போற்றும்… உலகம் போற்றும் தலைவர் அவரும் – அவருடைய குடும்பத்தாரும் வருகிறார்கள். திடீரென மந்திரி வர மாட்டேன் என்று சொன்னவர் வந்துவிட்டார் சொல்லி… அந்த இருக்கையை காலி செய்து இங்கே வரச் சொல்லி அவர் பேசுகிறார் என்று சொன்னேன்.
ரயில்வே அதிகாரி:
அதற்க்கு நான் என்ன செய்ய வேண்டும் என்று சொன்னார் ? நீங்கள் எனக்கு ஒதுக்கப்பட்டு இருக்கக்கூடிய… அந்த படுக்கையில் போய் நீங்கள் பயன்படுத்திக்கொள்வீர்களா ? அப்படி நீங்கள் அங்கே சென்றால் ? இந்த நான்கு படுக்கைகளும் காலியான இடமாகிவிடும் என்று சொன்னேன். சொன்ன மாத்திரத்திலேயே அவர் அங்கிருந்து இறங்கினார். இரண்டு பையையும் கையில் எடுத்துக் கொண்டார். நான் ஒரு பையை எடுத்துக் கொண்டேன். எனக்கு ஒதுக்கப்பட்ட இடத்திலேயே கொண்டு போய் அவரை படுக்க வைத்து விட்டு திரும்ப வந்தேன். ரயில்வே அதிகாரியிடம் கேட்டேன். தனியாகத்தானே சொல்ல வேண்டும் என்று சொன்னார் மந்திரி….
கதவை தட்டாதீங்க:
இப்போது போய் சொல்லுங்கள் அவர் அதை பயன்படுத்திக் கொள்ளட்டும் என்று…. திரும்பப் போன ரயில்வே அதிகாரிகள் வேகமாக வந்தார்கள். அமைச்சர் சொல்லுகிறார்.. நான் அப்படி போக மாட்டேன், எனக்கு எந்த இடம் ஒதுக்கி இருக்கிறார்களோ… அந்த படுக்கையை தான் நான் பயன்படுத்துவேன். எனவே கலைஞர் கருணாநிதி வேண்டுமானாலும் போக சொல்லுங்கள் என்று சொன்னார். இதை அதிகாரிகள் என்னிடம் சொன்னார்கள். நான் அதிகாரிகளிடம் சொல்லி… எந்த காரணத்தை கொண்டும் இந்த அறையை கதவை தட்ட முடியாது.
கை முறிந்துவிடும்:
கதவை தட்டினால் அந்த கை துண்டாக முறிந்து விடும் . இதைக் கேள்விப்பட்டு… இதைக் கேட்ட மாத்திரத்திலேயே கூட்டம் கூடிவிட்டது. கூட்டம் கோஷம் போட ஆரம்பித்துவிட்டது. கோஷம் போட ஆரம்பித்ததால் வேறு வழி இல்லாமல்… அந்த மந்திரி மற்ற ரெண்டு பேரை அழைத்துக் கொண்டு வந்தார். நல்ல போதையில் வந்தார்கள். அவர்கள் உள்ளே சென்றதற்கு பிறகு… ஒரு பெரிய போலீஸ் பட்டாளமே வந்தது.
பீரங்கி:
அவர்கள் அந்த வண்டியில் ஏறிக்கொண்டார்கள். அவர்கள் சொன்னார்கள் நாங்கள் திண்டுக்கல்லில் இருந்து வீட்டுக்கு திரும்பி போய் இருப்போம். உங்களால் தான் நாங்கள் இங்கே வந்திருக்கிறோம் என்று…. என்னவென்று மந்திரி உள்ளே இருக்கிறார். நீங்கள் வெளியே இருக்கிறீர்கள். ஏதாவது உங்களால் ஆபத்து வந்துவிடுமோ என்று பயந்து, அவர் எங்களை அழைத்து இருக்கிறார். நாங்கள் பாதுகாப்புக்காக வந்திருக்கிறோம் என்று… வைகோ என்ற இந்த ரெண்டு எழுத்து பீரங்கியைவிட பலமானது என்று அன்றைக்கு தான் நிரூபிக்கப்பட்டது.