மேற்கு ஆசியாவில், மத்திய தரைக் கடலின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஒரு சிறிய நாடு இஸ்ரேல் ஆகும். இதற்கும் ஹமாஸ் தீவிரவாத படைக்கும் கடந்த ஆண்டு முதல் போர் நடந்து வருகிறது. தற்போது ஹமாஸ் அமைப்பிற்கு இஸ்ரேலின் வடக்கு எல்லையான லெபானின் உள்ள ஹிஸ்புல்லா அமைப்பு துணையாக இருந்து வருகிறது. இந்த ஹிஸ்புல்லா அமைப்பு ஈரானுடன் தொடர்பில் உள்ளது. மேலும் இஸ்ரேல் நாட்டின் மீது அடிக்கடி தாக்குதல்களையும் ஏற்படுத்திக் கொண்டு வருகிறது. ஹிஸ்புல்லா அமைப்பினை அமெரிக்க, ஐரோப்பிய யூனியன்கள் ஏற்கனவே தடை செய்துள்ளன.

இந்நிலையில் ஹிஸ்புல்லா அமைப்பின் பேஜர்கள் நேற்று முன்தினம் வெடித்த நிலையில் தற்போது ஹிஸ்புல்லா அமைப்பின் வாக்கிடாக்கி வெடித்துள்ளது. இதில் 20-க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர் 450-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். இச்சம்பவம் லெபோனின் பாராளுமன்ற உறுப்பினர் அலி மஹ்தீன் மகன் இறுதி ஊர்வலத்தின் போது நடைபெற்றுள்ளது. இந்த நேரத்தில் ஹிஸ்புல்லா அமைப்பு பேஜர்கள் வாங்கும் போதே வாக்கி டாக்கிகளும் வாங்கியுள்ளனர். எனவே பேஜர்களில் வெடி குண்டு வைக்கும் போதே வாக்கி டாக்கி களிலும் வெடி குண்டு இஸ்ரேலின் உளவுத்துறை வைத்துள்ளது என செய்திகள் வெளியாகி உள்ளன.