நீலகிரி மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு அரசு பேருந்து இயங்கி வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் கூடலூரில் இருந்து நாடுகாணி, தேவாலா வழியாக சென்ற கடைசி பேருந்து கரியசோலையை சென்று அடைந்தது. அதன் பின் டிரைவர் பிரசன்னகுமார் மற்றும் கண்டக்டர் நாகேந்திரன் ஆகியோர் பேருந்தை நிறுத்திவிட்டு தங்கும் அறைக்குச் சென்றனர். அதன் பின் வழக்கம் போல் காலையில் எழுந்து பேருந்தை எடுக்க வந்தபோது பேருந்து அங்கு இல்லை.

அதிர்ச்சியடைந்த அவர்கள் அப்பகுதி முழுவதும் தேடினர், அப்போது சுமார் 3 கி.மீ தூரத்தில் உள்ள அரசு தேயிலைத்தோட்டம் அருகில் சாலை ஓரத்தில் நின்று கொண்டிருந்தது. இதுகுறித்து அவர்கள் இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த விசாரணையில் தேவாலா பகுதியைச் சேர்ந்த விஷால் (19) என்ற வாலிபர் கஞ்சா போதையில் பேருந்தில் தூங்கிக்கொண்டிருந்த அவர், சாலையில் இன்றுக்கொண்டிருந்த அரசு பேருந்தை கடத்தியது தெரியவந்தது. இவர் நேற்று முன்தினம் தேவாலா அட்டிப்பகுதியைச் சேர்ந்த செல்வக்குமார் என்பவரது பை சாவியுடன் நின்று கொண்டிருந்தது.

அதனை எடுத்து சிறிது தூரம் ஓட்டி சென்ற வாலிபர் சாலையோரமாக பைக்கை நிறுத்திவிட்டு, பின்பு பேருந்து நிலையத்தின்  அருகே நின்றிருந்த பேருந்தை எடுத்து சென்றுள்ளார். ஒரு வளைவில் திரும்பிய போது சாலையோர திட்டில் பேருந்து விபத்துக்குள்ளானது. அதனால் பேருந்தை அங்கே நிறுத்திவிட்டு மீண்டும் பேருந்து நிலையத்திற்கு சென்று தூங்கி விட்டார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து ரிஷாலை கைது செய்தனர்.