திமுக நடத்தும் நீட் விலக்கு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்டு பேசிய  DMK மாணவரணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான சி.வி.எம்பி எழிலரசன்,  நாம்  பெறக்கூடிய ஒவ்வொரு கையெழுத்தும் தமிழ்நாட்டின் மாணவர்களுடைய கல்வி உரிமைக்கான உயிராய் அமையப்போகிறது என்று சொன்னார்…  நான் சொல்கிறேன்,  நாம் பெறப்போகின்ற ஒவ்வொரு கையெழுத்தும்…. தமிழ்நாட்டில் மாணவர்களின் உரிமையை காக்க போகின்ற ஆயுத எழுத்து.  எனவே நீங்கள் பெறப்போவதும்….  போட போகின்ற ஒவ்வொரு கையெழுத்தும்….  இந்த ஒன்றிய பாஜக அரசை வீழ்த்துகின்ற ஆயுத எழுத்து என்பதை மறந்துவிடுகிறார்கள்.

ஆயுதத்தை உங்களிடம் கொடுத்துள்ளோம்… ரகசியம் ஏதுமில்லை… ஒன்று நாம் பெறுகின்ற இந்த கையெழுத்துக்கள் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் மக்களின் மக்கள் இயக்கமாக மாற இருக்கிறது. உண்ணா நிலை நீட் போராட்டத்தை அறிவித்தார். தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கான பேர் பொதுமக்கள் கூடி அதை பெரும் மக்களை இயக்கமாக மாற்றினார்கள்.

இன்றைக்கு கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைக்கிறார்.  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டுக்கு மட்டும் இந்த கையெழுத்தை  காட்டவில்லை,  ஒட்டுமொத்த இந்தியாவிற்கும்,  உலகிற்கும் காட்டியிருக்கிறார். இந்த கையெழுத்து இன்றைக்கு அட்டையில் இடப்பட்டு இருக்கிறது…  நாளை நாடாளுமன்றத்தில் இடப்பட்டு அது நீட் தேர்வு தமிழ்நாட்டிற்கு அல்ல….

இந்தியாவிற்கு…. எந்த மாநிலத்திற்கு தேவையில்லையோ…  அது நீக்கப்படும் என்ற  கையெழுத்தாக அது இருக்கின்றது. எனவே இந்த கையெழுத்து மக்கள் இயக்கமாக மாறி இருக்கிறது. இது மக்கள் இயக்கத்தின் அடுத்த கட்ட கையெழுத்து இங்கு அல்ல,  நாடாளுமன்றத்தில் இட்டு நம்மை நீட்டில் இருந்து மீட்டு தரக்கூடிய மாபெரும் இயக்கத்தை தொடங்கி வைத்திருக்கக்கூடிய கழக இளம் தலைவர் பின்னால் நாம் அணி வகுப்போம், வெற்றி காண்போம்.