மகாராஷ்டிராவின் சத்திரபதி சாம்பாஜிநகர் மாவட்டத்தில், சாலையில் நடந்து சென்ற பெண் ஒருவர் வேகமாக வந்த வெள்ளை நிற எஸ்யூவி காரால் மோதி உயிரிழந்துள்ள அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் அருகிலிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

சாலையோரம் தலையில் ஸ்டீல் பானையோடு நடந்த சென்ற பெண் ஒருவர் சாலையை கடக்க முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்து வேகமாக வந்த கார் அவரை நேருக்கு நேர் மோதியது. இந்த காட்சியில், பானை சிதறியது, அந்த பெண் தூக்கி வீசப்பட்டு, பின்னர் தரையில் வீழ்ந்ததும் தெளிவாக பதிவாகியுள்ளது.

 

விபத்துக்குப்பின் கார் நிற்காமல் தப்பிச்சென்றது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தும் பயந்தும் செயல் பட்டனர். தற்போது போலீசார் குற்றவாளியை பிடிக்க விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X தளத்தில் இந்த வீடியோவை பகிர்ந்த பயனர் @VishooSingh, “மனதை உருக்கும் விபத்து இது. சாலையை கடக்கும் பெண்ணை கார் நேரடியாக மோதுகிறது, ஆனால் கார் நிற்கவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.