கள்ளக்குறிச்சி அருகே கா.மாமனந்தல் என்ற கிராமத்தில் கார்த்திக் வசித்து வருகிறார்.இவர் லாரி ஓட்டுநர் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு சுதா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.

இந்நிலையில் அந்தப் பகுதியில் வசிக்கும் வடிவேல் என்பவரின் சொந்தமான தோட்டத்தில் உள்ள கிணற்றுக்குள் சுதா பிணமாக மிதந்தார். இச்சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் விரைந்து வந்த காவல்துறையினர் தீயணைப்புத் துறையினரின் உதவியின் மூலம் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சந்தேகத்தின் பெயரில் கார்த்திக்கிடம் விசாரணை மேற்கொண்ட போது தான் சுதா எரித்து கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டுள்ளார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இது குறித்து கார்த்திக்கிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிணற்றில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டது அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது