
டெல்லி சட்டப்பேரவையின் 70 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து பாஜக ஆட்சி தேவையான பெரும்பான்மையை பெற்று 27 ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளது. ஆம் ஆத்மி கட்சித் தலைவரான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொண்டு உள்ளார். தேர்தலுக்கு முன்னதாக பாஜக யமுனை நதியை சுத்தம் செய்வோம் என வாக்குறுதி அளித்தது.
அதனை நிறைவேற்றும் வகையில் டெல்லி கவர்னர் அலுவலகம் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “யமுனை நதியை தூய்மை செய்யும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. யமுனை நதியில் மிதக்கும் குப்பைகள், நீரை ஆக்கிரமிக்கும் செடிகள் ஆகியவற்றை அகற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
நீர்நிலைகளின் அடிப்பகுதி மண்ணை அகற்றும் பணிகளும் நடந்து வருகின்றன”. டெல்லி தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகளை துணைநிலை கவர்னர் சக்சேனா சந்தித்து இது குறித்து ஆலோசனை நடத்தியுள்ளார். இந்த ஆலோசனையில் உடனே யமுனை நதியை தூய்மைப்படுத்தும் பணிகளை தொடங்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தார். என தெரிவிக்கப்பட்டிருந்தது.