
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பகுதியில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் கடந்த பிப்ரவரி மாதம் 14 லேப்டாப்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்களை திருடிச் சென்றுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது கோட்டையம் மாவட்டம் வைக்கம் பகுதியில் வசிக்கும் ஹிஜாஸ்(40) என்பவர் திருடியது தெரிய வந்தது. இதையடுத்து காவல்துறையினர் அவரை கைது செய்தனர். அதன் பின் அவரிடம் நடத்திய விசாரணையில், அவர் கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பகுதியில் மட்டும் அவர் 16க்கும் மேற்பட்ட திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டுள்ளார். அவர் லேப்டாப் உள்ளிட்ட மின்னணு பொருட்களை திரட்டுவதையே வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர் தான் திருடிய பொருட்களை காங்கிரஸ் INDUC தொழிற்சங்க அலுவலகத்தில் பதுங்கி வைத்துள்ளார். இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அங்கிருந்து லேப்டாப்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்களை பறிமுதல் செய்தனர். அந்த தொழிற்சங்க அலுவலத்தை சமீப காலமாக சங்கத்தின் நிர்வாகிகள் பயன்படுத்தாமல் பூட்டி வைத்துள்ளனர்.
அதனை நோட்டமிட்ட ஷிஜாஸ், அதை திருட்டு பொருள் வைக்கும் கொடோனாக பயன்படுத்தி வந்துள்ளார். இதற்காக அந்த அலுவலகத்தில் ஏற்கனவே பூட்டப்பட்டிருந்த பூட்டை உடைத்து புதிய பூட்டை வாங்கி போட்டு பயன்படுத்தி வந்துள்ளார். அவர் இந்த குடோனை பயன்படுத்தி வருவது அலுவலக நிர்வாகத்தினருக்கு யாருக்கும் தெரியவில்லை. இந்த திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்ட ஷிஜாஸ் மருத்துவமனை ஒன்றில் ஊழியராகவும் பணியாற்றி வந்துள்ளார்.