கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உள்ளது சிதம்பரம் நடராஜர் திருக்கோவில். இக்கோயில் ஆண்டு ஒன்றுக்கு அறநிலை கட்டுப்பாட்டில் இருந்த பொழுது மூன்று கோடி ரூபாய் வருமானம் ஈட்டியது. ஆனால் தற்போது தீட்சிதர்கள் கட்டுப்பாட்டில் இயங்கும் சிதம்பரம் கோவில் ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாயை வருமானம் வருகிறது. இதன் காரணமாக அறநிலையத்துறை தீட்சிதர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கு ஐகோர்ட் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த வழக்கில் அறநிலை துறை பல கேள்விகளை எழுப்பி உள்ளது. 2014 இல் இருந்து தற்போது வரை கோயில் நிர்வாகம் தீட்சிதர்கள் கையில் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் கோயிலுக்கு செலுத்தப்படும் காணிக்கைகள் போன்றவை கணக்கில் காட்டுவதில்லை என புகார் அளித்துள்ளது. மேலும் கோயிலில் வரும் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்வதற்கு என்ன வருமானம் உள்ளது? எனவும் கேள்வி எழுப்பப்பட்டன. இது கொடுத்து ஐகோர்ட் தீச்சதர்களுக்கு பதில் மனு வழங்கியுள்ளது. இதில் 2014 இல் இருந்து தற்போது வரை கோவிலின் வரவு செலவு கணக்குகள் நீதிமன்றத்தில் கொடுக்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்நிலையில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது .இதனை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார், சௌந்தர் அடங்கிய குழுவாகும். இதில் அறநிலையத்துறை மேலும் ஒரு குற்றச்சாட்டை வைத்தது .

கோவிலுக்கு பாத்தியப்பட்ட மூவாயிரம் ஏக்கர் நிலத்தை தீட்சிதர்கள் விற்றுவிட்டதாகவும் தற்போது ஆயிரம் ஏக்கர் மட்டுமே உள்ளது எனவும் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில் கணக்கு புத்தகம் சரியாக சமர்ப்பிக்கப்படாதது மற்றும் கோயிலின் நன்கொடை நிலம் 3000 ஏக்கரில் இருந்து ஆயிரம் ஏக்கராக மாறியது குறித்து நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து நீதிபதிகள் கூறியதாவது, அடுத்த கட்ட விசாரணையின் போது கோவிலின் 2014 இல் இருந்து 2024 வரையிலான அனைத்து வரவு செலவு கணக்குகளையும் தீட்சிதர்கள் சமர்ப்பிக்க வேண்டும் மேலும் நன்கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் குறித்த ஆவணங்களை அறநிலையத்துறை தாசில்தார் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறி விசாரணையை அடுத்த தேதிக்கு ஒத்தி வைத்துள்ளனர்.