
செய்தியாளரிடம் பேசிய திருநாவுக்கரசர் எம்.பி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி சென்னை வந்தாங்க. ஏற்கனவே சோனியா காந்தி, கலைஞருடைய சிலை திறப்புல வந்திருக்காங்க… தலைவர் ராகுல் காந்தியும் அவங்களும் சேர்ந்தே வந்திருக்காங்க. நான் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கும் போது எங்க கட்சி ஆபீஸுக்கு ராகுல் காந்தி வந்து லஞ்ச் சாப்பிட்டு போனாரு. இப்ப பிரியங்கா காந்தி, சோனியா காந்தி ரெண்டு பேரும் வந்தாங்க.
எங்கள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் மாநிலத்தில் இருக்கக்கூடிய அணிகள், தலைவர்கள், நிர்வாகிகள் என 60 பேரை வர சொல்லிருந்தாங்க. எல்லாரும் சந்திச்சு… கட்சியினுடைய நிலவரம் எப்படி இருக்கு ? பூத் கமிட்டி எல்லாம் போட்டாச்சா ? எல்லாம் இடத்துலயும் கிளைகள் பதிவாகி இருக்கிறதா ? எப்படி செயல்படுகிறீர்கள் ? தோழமைக் கட்சிகள் உங்களுடைய எப்படி செயல்படுறாங்க ? தேர்தல் வருது.. எல்லா வகையிலும் வெற்றி பெறனும்.
இந்த மாதிரி கருத்துக்களை கேட்டாங்க. சில பேருக்கு தங்களுடைய கருத்துக்களை சொன்னாங்க. அவங்க ஆலோசனைகளை காங்கிரஸ் நிர்வாகிகளிடம் சொன்னாங்க. அது மாதிரி பிரியங்கா காந்தியும் கட்சி வளர்ச்சி குறித்து தங்களுடைய ஆலோசனை தெரிவித்தார். ஒற்றுமையாக இருங்க என்று சொன்னால் ஏற்கனவே சண்டையா இருக்குன்னு அர்த்தம் கிடையாது.
தொடர்ச்சியாக தேர்தல் வருது. எல்லாருக்கும் கூட்டாக செயல்படுங்கன்னு கட்சி சார்பில் சொல்றது ஏற்கனவே சண்டை போட்டுட்டு இருக்கிறதா அர்த்தம் கிடையாது. தேர்தல் வருது கூட்டா செயல்படுங்கள் என்பது பொதுவான ஆலோசனை. அந்த ஆலோசனையை சொன்னாங்க.
கட்சியின் உட்சபச்ச தலைவர் சோனியா காந்தி கூட்டணி கட்சியினரிடம் எவ்வளவு சீட் வாங்கணும் என்பதையெல்லாம் 50, 60 பேர் எங்களை மட்டும் வச்சுக்கிட்டு.. பேச மாட்டாங்க. அது மாதிரி சீட்டை பத்தி எதுவும் பேசல. எலக்சனுக்கு இன்னும் ஆறு, ஏழு மாசத்துக்கு மேல இருக்கு. ஏப்ரல், மேல தான் எலக்சன் வரும். அதுக்குன்னு டைம் இருக்கு. இடங்களை பற்றி பேசவில்லை என்ன தெரிவித்தார்.