செய்தியாளரிடம் பேசிய ஓபிஎஸ் ஆதரவாளர் மருது அழகுராஜ், திரு.எடப்பாடிக்கு இந்திய அரசியல் வரலாற்றில்….. இந்திய விடுதலைக்குப் பிறகு…. ஒரு அரசியல் தலைவருக்கு இத்தனை தீர்ப்புகள் நீதிமன்றத்தில் இருந்து சாதகமாக கிடைத்ததில்லை என்ற ஒரு சரித்திரத்தை அவர் படைத்திருக்கிறார்.  அவருக்கு பின்னால் இருக்கக்கூடிய அந்த சட்ட பின்புலம் என்பது,  ஒட்டுமொத்த தமிழக மக்களையும் ஆச்சரியத்தில் உள்ளாக்கி இருக்கிறது. ஏறத்தாழ ஒரு டசன் தீர்ப்புகள் அவருக்கு சாதகமாக கிடைத்திருக்கிறது.

கொடநாடு குறித்து யாரும் பேசக்கூடாது என்று தீர்ப்பு வாங்குகிறார்… அதற்கு பிறகு கொடியை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று ஒரு தீர்ப்பை வாங்குகிறார்….. ஒட்டுமொத்த அண்ணா திமுகவின் அரசியலையும் மக்கள் மன்றத்தை வைத்து நடத்துவதற்கு பதிலாக,  நீதிமன்றத்தின் பின்புறத்திலேயே எடப்பாடி நடத்தி வருகிறார்.

ஆனாலும் மாற்றுமைமிக்க  நீதிமன்றங்களுடைய தீர்ப்புகளை நாங்கள் மதிக்கின்றோம். அதே நேரத்தில் அவருக்கு கிடைத்திருக்கும் தீர்ப்புகள் அனைத்தும்….  புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் விதிகளையும் சரியாக பார்க்காமல்,  எடப்பாடியின் சதிகளை சரியாக உற்று நோக்காமல் தரப்பட்ட ஊனமுற்ற தீர்ப்புகள் என்பதுதான் ஒன்றரை கோடி தொண்டர்களுடைய கருத்து என தெரிவித்தார்.