மயிலாடுதுறை அருகே உள்ள பகுதியில் இளங்கோவன்(69), செந்தாமரை(59) என்ற தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இதில் இளங்கோவன் ஹோமியோபதி மருத்துவராகவும், மயிலாடுதுறை திராவிட கழக நகர தலைவராக இருந்திருந்தார். இவர்களுக்கு 2 மகள்களும், 1 மகள் மகனும் உள்ளனர். இளங்கோவனுக்கு கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பாக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், அவரது மனைவி சிறுநீர் கோளாறால் படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இந்த மூத்த தம்பதியினரை அவர்களது பிள்ளைகளின் திருமணத்திற்கு பின் கவனிக்க ஆளில்லாததால் மனமுடைந்த அவர்கள் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி இன்று கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு தற்கொலைக்கு முயற்சி செய்தனர். அப்போது கேஸ் சிலிண்டர் வெடித்து தீ பரவியதில் வீட்டின் ஒரு பாதி சேதம் அடைந்து தரைமட்டமானது. இதில் இளங்கோவன் மற்றும் செந்தாமரை இருவரும் படுகாயம் அடைந்தனர். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே செந்தாமரை பரிதாபமாக உயிரிழந்தார். இளங்கோவன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து நீதிபதி இளங்கோவனிடம் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.