மார்செல்லஸ் இன்வெஸ்ட்மென்ட் மேனேஜர்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதலீட்டுத் தலைவர் சௌரப் முகர்ஜியா, சமீபத்தில் ஒரு பாட்காஸ்ட் உரையில் அளித்த கருத்துகள் தற்போது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் AI தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் நடுத்தர மேலாளர்களின் தேவை குறைவது போன்ற காரணங்களால், பாரம்பரிய வெள்ளை சட்டை வேலைகள் மங்கிக்கொண்டிருக்கின்றன என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

“கூகுள் தங்களுடைய கோடிங் பணிகளில் ஏற்கனவே மூன்றில் ஒரு பங்கு AI மூலம் செய்துவிடுகிறது. இதே மாதிரி மாற்றம் இந்தியா முழுவதும் IT, மீடியா, நிதி துறைகளிலும் விரைவில் ஏற்படும்,” என அவர் தெரிவித்தார்.

ஒரு காலத்தில், ஒரே நிறுவனத்தில் 30 வருடங்கள் வேலை செய்திருந்த பாணி இன்று நிலைநாட்ட முடியாத ஒன்று என்றும், இந்திய நடுத்தரவர்க்கத்தின் வளர்ச்சியை உருவாக்கிய வேலை அடித்தளம் இனி நிலைத்து இருக்காது என்றும் கூறினார்.

ஆனால் இது நெருக்கடியாக அல்ல, வாய்ப்பாக பார்க்கவேண்டும் என அவர் வலியுறுத்தினார்.  மேலும் “நாம் முன்பு வேலைவாய்ப்புகளுக்காக செலுத்திய புத்திசாலித்தனமும், முயற்சியையும் தொழில் தொடங்கும் எண்ணத்தில் செலுத்தினால், இந்தியாவின் புதிய செழிப்பு தரையிலே நிற்கும்,” என உறுதியோடு கூறினார்.