சென்னை போரூரில் உள்ள பகுதியில் சிவமுருகன், சந்தான லட்சுமி எனும் தம்பதியினர் வசித்து வருகிறார்கள். இவர்களுடன் சேர்ந்து சந்தான லட்சுமியின் தாயார் சாந்தி (55) என்பவரும் வசித்து வருகிறார். நேற்று முன் தினம் வழக்கம்போல் சாந்தி தனி அறையில் உறங்கிக் கொண்டிருந்தார். இந்நிலையில் நேற்று வீட்டின் கதவை மர்ம நபர்கள் தட்டியுள்ளனர்.

சத்தம் கேட்டு எழுந்த சாந்தி கதவைத் திறந்துள்ளார். அப்போது வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் சாந்தியை சரமாரியாக தாக்கி, அவரது கை மற்றும் கால்களை கட்டி, வாயில் துணியை திணித்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து அவரது முகத்தில் மயக்க மருந்து அடித்து மயங்க செய்தனர். பின்னர் பீரோவில் இருந்து 20 பவுன் நகைகள் மற்றும் ரொக்க பணத்தை திருடி அங்கிருந்து தப்பித்தனர். இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்த சிவமுருகன் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அந்த புகாரின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர், இந்த சம்பவம் குறித்து விசாரித்து வந்தனர். இந்நிலையில் திடீர் திருப்பமாக சம்பந்தப்பட்ட பெண்ணே இந்த சம்பவத்திற்கு காரணம் என்று காவல்துறையினர் கூறினர். இந்த வழக்கு குறித்து தனிப்படை அமைத்து போலீசார் விசாரித்த போது அவர்களுக்கு சந்தேகம் வந்தது.

அதாவது வெளிநபர்கள் யாரும் வீட்டிற்குள் வரவில்லை என்று உறுதி செய்த காவல்துறையினர் சாந்தியை தனியாக விசாரித்தனர். அப்போது அவர் கூறியதாவது, மகள் வீட்டில் இருந்த நகைகள் மற்றும் பணத்தை கொஞ்சம் கொஞ்சமாக திருடி அடகு கடையிலும், கூட்டுறவு வாக்கிலும் அடகு வைத்தேன்.

இதுகுறித்து அவர்களுக்கு சந்தேகம் வந்துவிடுமோ என்ற அச்சத்தில் சம்பவத்தன்று தனது வாயில் துணியை திணித்து, கை மற்றும் கால்களை கட்டிக்கொண்டு நாடகம் நடித்தேன். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.