வங்க கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக கடந்த சில நாட்களாகவே கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது/ இதனால் பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் திருவண்ணாமலை மாவட்டம் சிதம்பர நகரில் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் பல வீடுகள் இடிந்து விழுந்தன.

அதோடு பெரிய பாறை ஒன்று உருண்டு விழுந்து, ராஜ்குமார் என்பவரின் வீட்டின் மீது விழுந்தது. இதில் அந்த வீட்டில் இருந்தவர்கள் இடுப்பாடுகளில் சிக்கி உயிர் இழந்தனர். இந்த மண் சரிவால் மொத்தம் ஏழு பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் நேற்று மீட்பு படையினர் 5 பேர் உடல்களை மீட்டனர். தற்போது ஆறாவது உடலும் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மீதமுள்ள உடலை மீட்கும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றது.