தமிழ் சினிமாவில் பிரபலமான இயக்குனராக இருப்பவர் நெல்சன். கோலமாவு கோகிலா மற்றும் டாக்டர் என வெற்றி படங்களை கொடுத்த நெல்சன் நடிகர் விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கினார். இந்த படம் போதிய வரவேற்பை பெறவில்லை. தற்போது நடிகர் ரஜினியை வைத்து நெல்சன் ஜெய்லர் என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகும் ஜெயிலர் திரைப்படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஒரு விருது வழங்கும் விழாவில் நெல்சன் அவமானப்படுத்தப்பட்டதாக கூறி ஒரு வீடியோ தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதாவது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் விருது வழங்கும் விழாவிற்கு வரும்போது அவரை சுற்றி பவுன்சர்கள் மற்றும் கேமராக்கள் என மேடை ஏறும் வரை செல்கிறார்கள். ஆனால் இயக்குனர் நெல்சன் காரிலிருந்து இறங்கிய போது அவரை யாரும் கண்டு கொள்ளவில்லை. சில பவுன்சர்கள் சிறிது தூரம் சென்றுவிட்டேன் நீங்களே சென்று விடுங்கள் என்று  கூறிவிட்டு அங்கிருந்து கிளம்பி விட்டனர். மேலும் ஒரே ஒரு தோல்வி படத்தை கொடுத்து விட்டார் என்பதற்காக இயக்குனர் நெல்சனை இப்படி நடத்திய விருது வழங்கும் குழுவை நெட்டிசன்கள் பலரும் விளாசி வருகிறார்கள்.