இன்றைய காலத்தில் சமூக வலைதளத்தில் வைரலாக கொடூரமான விலங்குகளுடன் விளையாடுவது, அதனை தூக்கி கொஞ்சுவது போன்ற வீடியோக்கள் சமூக வலைதளங்களில் அதிகரித்து வருகின்றன. இதேபோன்று சமீபத்தில் குழந்தை ஒன்று மிகப் பெரிய பாம்புடன் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

அந்த வீடியோவில், சிறுவன் ஒருவர் பெரிய அளவிலான பைத்தான் இன பாம்புடன் மிகவும் நெருக்கமாகவும், பயமின்றி விளையாடுகிறார். அந்தப் பாம்பு பார்ப்பதற்கே பயத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்த போதிலும் சிறுவன் அதனுடன் கொஞ்சி விளையாடுவது, அதன் தலையைப் பிடித்து கொண்டு தள்ளுவது போன்ற காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

அந்த மிகப்பெரிய பாம்பு சிறுவனின் அருகில் அமைதியாக படுத்திருப்பதையும் வீடியோவில் காணலாம். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பலரும் அதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அது ஒரு காட்டு யானை போன்ற விலங்கு, அதனை எப்பொழுதும் நம்ப முடியாது.

பெற்றோர்கள் இப்படி பைத்தியக்காரத்தனமாக வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்வது ஏன்? என பலரும் கடும் விமர்சனங்களை தெரிவித்துள்ளனர். குழந்தையின் பாதுகாப்பை பற்றி கவலைப்படாமல் வெறும் லைக்குகாக இதுபோன்ற வீடியோக்களை எடுப்பது தவறு எனவும் சுட்டிக்காட்டி உள்ளனர்.