
கனமழை பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களை ஆய்வு செய்த தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ள கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்க கோரி ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் திரு.ராஜ்நாத்சிங் அவர்களுக்கு கடிதம் எழுதினேன்.
வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பதற்கும்… உணவு பொருட்களை விநியோகிக்கவும் விமானப்படையின் 4ஹெலிகாப்டர்கள், கடற்படையின் 2 ஹெலிகாப்டர்கள் மற்றும் கடலோர காவல் படையின் 2 ஹெலிகாப்டர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
பெரும் மழையின் தாக்கம் அதிகமாக இருப்பதை கருத்தில் கொண்டு மீட்ப்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு கூடுதல் ஹெலிகாப்டர்கள் தேவைப்படுவதால் அதிகபட்ச அளவில் ஹெலிகாப்டர்கள் அனுப்பி வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டதன் அடிப்படையில், அவர்களும் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.
மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் பெரும் முயற்சியினாலும்…. தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையின் சிறந்த பங்களிப்பினாலும், வருவாய் துறை மற்றும் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைந்த கள பணிகளாலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.