சீனா, அமெரிக்கா, இந்தியாவிற்கு அடுத்து உலகில் மிகப்பெரிய ராணுவத்தை கொண்ட நாடு வடகொரியா. உலக நாடுகளில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட வடகொரியா ராணுவத்திற்கு மட்டுமே அதிகம் முன்னுரிமை கொடுக்கும் நாடாக விளங்குகிறது. சமீபத்தில் தென் கொரியாவுக்கு ஆதரவாக அமெரிக்காவுக்கு எதிராக செயல்பட்டு வரும் வடகொரியா அணு ஆயுத சோதனைகள் மற்றும் விண்வெளி ஆய்வு சோதனைகளில் அதிக ஆர்வம் கொண்டுள்ள நாடாகும்.

இந்த நாட்டில் மக்கள் மிகுந்த கட்டுப்பாட்டுடன் வாழ்வதாகவும், இங்கு மக்களின் வாழ்க்கை முறை, கல்வி, தொழில்கள், நாட்டு நடப்புகள் எதுவுமே வெளி உலகத்திற்கு இதுவரை தெரிய வந்ததில்லை. இதுவரை வடகொரியா தங்களது கட்டமைப்புகள் மற்றும் ராணுவ அமைப்புகள் பொது வெளியிடங்கள் போன்றவற்றை புகைப்படங்களாக வெளியிட்டதில்லை.

 

இந்த நிலையில் சர்வதேச செய்தி நிறுவனமான ராயீட்டர்ஸ் தற்போது வடகொரியாவின் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. கொரியாவில் இருந்து பிரிந்த இந்த நாடானது கொரிய எல்லைப் பகுதியில் இருந்து பார்க்கும் தூரம் வரை தெரியும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கிஜுங்டாங் கிராமம்,சினுஜ்ஜி பகுதிகள் உள்ளிட்ட புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.