இங்கிலாந்தில் வசிக்கும் 4 பேர், அவர்களது 17 வயதிலிருந்து இணைபிரியா தோழிகளாக இருந்துள்ளனர். இந்நிலையில் கடந்த 1972ம் ஆண்டு இவர்கள் அங்குள்ள கடற்கரை நகரமான டேவோசுக்கு சுற்றுலா சென்றுள்ளனர். அப்போது இவர்கள் 4 பேரும் சேர்ந்து கைகோர்த்தபடி புகைப்படம் எடுத்துக் கொண்டனர். அப்போது தங்களுடைய 70 வயதில் இதே இடத்துக்கு மீண்டும் வந்து புகைப்பட எடுக்க வேண்டும் என்று அவர்கள் தமாசாக பேசிக் கொண்டனர்.

இந்நிலையில் சுமார் 50 ஆண்டுகளாக அவர்களது நட்பு தொடர்ந்தது. இதனால் குறிப்பிட்ட அந்த கடற்கரை நகருக்கு தோழி நான்கு பேரும் சென்றுள்ளனர். இவர்கள் பள்ளி பருவத்தில் தாங்கள் எடுத்த புகைப்படத்தை மீண்டும் மறு உருவாக்கம் செய்தனர். அதாவது அப்போது அணிந்திருந்த அதே நிறத்திலான உடையை மீண்டும் அணிந்துக்கொண்டு போட்டோ எடுத்துக் கொண்டனர். இப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.