
மதுரை மாவட்டம் அரிசிக்காரத் தெருவில் நீலமேகம்(64) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திரைப்பட விநியோகஸ்தர்களிடம் பணிபுரிந்து வந்துள்ளார். இவர் புதிய படங்களை திரையரங்குகளில் வெளியிடும்போது பல்வேறு ஊர்களுக்கு சென்று ரசிகர்களின் கூட்டம், டிக்கெட், வசூல் விவரம் குறித்து தகவலை கேட்டுறியும் ஊழியராக இருந்துள்ளார்.
மது போதைக்கு அடிமையான இவர், 15 நாட்களுக்கு ஒரு முறை வீட்டிற்கு சென்றுள்ளார். வீட்டிற்கு வரும் நேரங்களில் அடிக்கடி தனது மனைவியிடம் தேவையின்றி சண்டை போட்டுள்ளார்.
இந்நிலையில் இவர் நேற்று மனைவியை மிரட்ட தனது உடலில் மண்ணெண்ணையை ஊற்றி விளையாட்டாக தீக்குளிப்பது போன்று நடித்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக அவரது உடலில் தீ பற்றி எரிந்தது. இதனால் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.