
தமிழ் சினிமாவில் நேர்கொண்ட பார்வை & வலிமை படங்களுக்கு பின் நடிகர் அஜித்குமார்- எச்.வினோத்- போனிகபூர் 3-வது முறையாக இணைந்த படம் துணிவு. இந்த திரைப்படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி உலகம் முழுவதும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் நடிகர் அஜித், மஞ்சு வாரியர், ஜான் கொக்கன், வீரா, சமுத்திரக்கனி, மகாநதி சங்கர், பிக்பாஸ் அமீர், பாவனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.