கடந்த திங்கட்கிழமை அன்று துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கங்களால் ஏராளமானோர் தங்கள் உயிர்களையும், உடைமைகளையும் இழந்துள்ளனர். துருக்கியில் மட்டுமே சுமார் 12,000-க்கு அதிகமானோர் இறந்திருப்பதாக தகவல் வெளியானது. இதற்கிடையில் மீட்பு பணிகள் அங்கு தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் துருக்கி, சிரியா நிலநடுக்கங்களால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16,000-ஐ தாண்டி உள்ளது. இதனால் அங்கு இடிப்பாடுகளுக்கு இடையே குவியல் குவியல்களாக மனித சடலங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான மக்கள் தங்கள் இருப்பிடம், உடைமைகளை இழந்து நிற்கதியாகியுள்ளனர்