டிக்டாக் என்ற செயலியை சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் நிர்வகித்து வருகிறது. பாதுகாப்பு காரணங்களால் இந்தியாவில் இந்த செயலிக்கு தடை விதிக்கப்பட்டது. அதேபோன்று அமெரிக்காவிலும் 17 கோடிக்கு அதிகமானோர் இந்த செயலியை பயன்படுத்தி வரும் நிலையில், ஜோபாயுடன் அரசு சமீபத்தில் இந்த செயலிக்கு தடை விதித்தது. இதை எதிர்த்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இதை தொடர்ந்து இந்த செயலியை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு குறுஞ்செய்தி மூலம் இதன் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், வழக்கம் போல் செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இதுகுறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்த செயலிக்கு அந்நாட்டு நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்ட நிலையில், அந்நாட்டின் பிரதமராக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப், மீண்டும் அந்த செயலி பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக அந்நிறுவனம் கூறியதாவது, இந்த செயலியின் சேவையை வழங்குவதற்கு தேவையான உத்தரவுகளை அழைத்த டொனால்ட் டிரம்புக்கு நன்றி, நீண்ட கால தீர்வுக்கு டிரம்புடன் வந்து பணியாற்றுவோம் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.