தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்கும் வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்புகளை நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக 12.90 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதாவது தமிழ்நாடு அரசு தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சி மூலம் நடத்தும் போட்டி தேர்வுகளில் மாற்றுத்திறனாளிகள் அதிக அளவில் கலந்து கொண்டு வெற்றி பெற வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி சுமார் 200 மாற்றித்திறனாளிகளுக்கு தங்கும் வசதியுடன் கூடிய சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. மேலும் இந்த பயிற்சி வகுப்புகள் முதல் கட்டமாக சென்னையில் உள்ள எஸ்.ஐ காது கேளாதோர் மேல்நிலைப் பள்ளியில் நடக்க உள்ளது.