ஆண்ட்ராய்டு ஓஎஸ் 12, 12 எல், 13 மற்றும் 14 ஆகியவற்றை பயன்படுத்துபவர்கள் சைபர் கிரைம் தாக்குதலுக்கு உள்ளாக வாய்ப்புள்ளதாக மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த ஓஎஸ்-களை பயன்படுத்தும் பயனாளர்களின் முக்கியமான தகவல்களை பெறுவதற்காகவே இந்த தாக்குதல்கள் நடத்தப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

கட்டமைப்பு, சிஸ்டம், கூகுள் பிளே சிஸ்டம் அப்டேட் ஆகியவற்றில் உள்ள குறைபாடு காரணமாக இந்த தாக்குதல் நடக்கின்றது. ஒரிஜினல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து கிடைக்கும் பொருத்தமான அப்டேட்களை புதுப்பிக்க வேண்டும்.

பாதுகாப்பான அப்டேட்ஸ்களை  இன்ஸ்டால் செய்ய அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது. உங்களுக்கு இந்த பாதுகாப்பு அப்டேட் கிடைக்கவில்லை என்றால், நம்பிக்கை இல்லாத செயலிகள், தெரியாத இணைதளம், சந்தேகத்திற்குரிய லிங்ஸ் ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

அப்டேட் செய்துவிட்டால் பயனர்கள் அவர்களுடைய செல்போன்களை  கடுமையான பாதிப்பிலிருந்து தடுக்கலாம் என்றும் தெரிவித்துள்ளது