
மகாராஷ்டிரா மாநிலம் வார்தா பகுதியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, காங்கிரஸ் தலைவர்களின் மொழி மாறிவிட்டது. வெளிநாட்டு மண்ணில் இந்தியாவுக்கு எதிராக பேசியுள்ளனர் என்றார். அதாவது ராகுல் காந்தியை குறிப்பிட்டு வெளிநாட்டு மண்ணில் இந்தியாவுக்கு எதிரான பிரச்சாரம் மேற்கொண்டார் என்று மறைமுகமாக குறிப்பிட்டார்.
அதோடு காங்கிரஸ் கட்சியினருக்கு வெறுப்பு பேய் பிடித்து இருப்பதாகவும் கூறினார். அதன்பிறகு காங்கிரஸ் கட்சியினருக்கு விநாயகர் சதுர்த்தி விழா நடைபெறுவது பிடிக்கவில்லை. காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்த தேசப்பற்று என்ற உயிர் தற்போது மரணித்துவிட்டது. அந்தக் கட்சியை தற்போது வெறுப்பு பேய் பிடித்து ஆட்டுகிறது. சோனியா காந்தியின் குடும்பமே ஊழல் மிக்க ராஜ குடும்பம். மேலும் வெளிநாடு சென்று இந்தியாவின் மீதான எதிர்ப்பை வெளிப்படுத்துகிறார்கள் என்று கூறினார்.