
விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சி கோட்டையில் உள்ளே கமலக்கண்ணி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் இன்று முதல் பத்து நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. இந்நிலையில் கமலக்கண்ணி அம்மன் கோவில் திருவிழாவை முன்னிட்டு செஞ்சி கோட்டைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு இன்று முதல் வருகிற மே மாதம் 3- ஆம் தேதி வரை இலவச அனுமதி வழங்கப்படுகிறது. இந்த தகவலை தொல்பொருள் ஆய்வு துறையின் பராமரிப்பு அலுவலர் நவீந்திரன் தெரிவித்துள்ளார்.