வடக்கு அமெரிக்காவில் இருந்து 30 பேர் சேர்ந்து பேருந்தில் மெக்சிகோ நகரில் இருந்து சிகுவாகா மாகாணத்திற்கு சுற்றுலா சென்றுள்ளனர். பேருந்து ஜக்கா டெக்காஸ் மாகாணத்திற்கு அருகில் வந்து கொண்டிருந்தபோது ஓட்டுநர் திடீரென்று நிலைத்தடுமாறி எதிரே வந்து கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக சென்று மோதி உள்ளார். இதனால் இரு வாகனங்களின் முன் பகுதியும் நசிங்கி சேதமடைந்தது.

இந்த விபத்து குறித்து அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து இடிபாடுகளில் சிக்கி உடல் நசுங்கி இறந்த 24 பேரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் மேலும் 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனர் அவர்களை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து அப்பகுதியில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.