
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பகுதியில் பாலசுப்பிரமணியம் (50) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் இன்று அப்பகுதியில் உள்ள சாலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டார். அப்போது அந்த வழியாக சுற்றுலா பயணிகள் வாகனத்தில் வந்துள்ளனர். அந்த சுற்றுலா பயணிகள் பால சுப்பிரமணியனிடம் குழுப் புகைப்படம் எடுத்து தரும்படி கேட்டுள்ளனர். அவரும் அதற்கு சரி என்று கூறியுள்ளார்.
இதனால் அவர் சாலையின் நடுவே நின்றுக்கொண்டு அவர்களை புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.