டெல்லியில் பஜன் புரா மாவட்டத்தில் உள்ள பகுதியில் வசிக்கும் ஹரிஷ் பைச்லா(32) என்பவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று தனது பிறந்த நாள் விழாவை கொண்டாடியுள்ளார். அதன் பிறகு வீடு திரும்பிய அவர், சாக்கடை கால்வாயின் விளிம்பில் உட்கார்ந்துள்ளார். அப்போது தான் சாக்கடை கால்வாயின் விளிம்பில் உட்கார்ந்ததை மறந்துபோன அவர், சற்று பின்னால் சாய பின்னே தள்ளி அமர முயற்சித்தார். அப்போது தன் நிலையை இழந்த அவர் சாக்கடை கால்வாயில் விழுந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை காப்பாற்ற முயன்றனர்.

ஆனால் கால்வாயின் ஆழம் மற்றும் நீரோட்டத்தின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்களால் காப்பாற்ற முடியவில்லை. இதனால் அவர் சம்பவ இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு, அந்த உடலை மீட்க நீர்மூழ்கி வீரர்களை வரவழைத்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரித்தபோது, அவர் திருமணம் ஆனவர் என்றும், அவருக்கு ஒரு குழந்தை உள்ளது என்றும் தெரியவந்தது. இதுகுறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.