
திருவள்ளூர் அடுத்த புட்லூர்-செவ்வாப் பேட்டை பகுதியில் உள்ள ரயில் நிலையங்களுக்கு இடைப்பட்ட பகுதியில் 35 வயது நபர் ஒருவர் தண்டவாளத்தின் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மின்சார ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. ரயில் வருவதை அறியாமல் அந்த நபர் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட நிலையில் வேகமாக வந்த ரயில் அவர் மீது மோதியதால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைப் போன்று திருவள்ளூர் ரயில் நிலையத்தின் அருகே 35 வயது நபர் ஒருவர் ரயில் வருவதை அறியாமல் தண்டவாளத்தை கடக்க முயன்ற நிலையில் ரயில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைத் தொடர்ந்து இவர்களின் உடல்களை திருவள்ளூர் ரயில்வே இருப்பு பாதை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதோடு ஒரே நாளில் திருவள்ளூரில் இரு வெவ்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ள நிலையில் ரயில் மோதி இறந்த நபர்கள் யார் யார் என்பது தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது