நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர்  மோடி, மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனிசேஷன் சொல்லி இருக்கிறது…. ஜல் ஜீவன் மிஷன் மூலமாக 4 லட்சம் பேரின் வாழ்க்கை தப்பி இருக்கிறது என்று சொல்லி இருக்கின்றது.  இவர்கள் யார் ? இவர்கள் ஏழைகள்.  சமூகத்தின் கீழ் தட்டுகளில் வசிப்பவர்கள்.

4 லட்சம் பேரின் வாழ்க்கை தப்பி  இருக்கிறது என்று WHO சொல்கிறது… WHO தீவிரமான பாரதம் என்கின்ற எங்கள் திட்டத்தை ஆய்வு செய்து சொல்கிறது,  இதனால் மூன்று லட்சம் பேர் இறப்பதை தடுத்திருக்கிறது  இந்த திட்டம் என்று சொல்கிறது…

இந்தியா சுத்தமாகி இருக்கின்றது, மூன்று லட்சம் பேர் தப்பி  இருக்கிறார்கள் என்றால் ? இவர்கள் யார் ? இவர்கள் எல்லாம் கீழ் நிலையில் இருக்கின்ற தொழிலாளர்கள். இவர்கள் மிகுந்த கஷ்டமான சூழ்நிலையில் வாழ்க்கை நடத்துபவர்கள்.

நகரங்களில் இருக்கின்ற சேரி பகுதிகளில் வாழ்கிறவர்கள். கிராமங்களில் வாழ்கிறவர்கள். எந்த விதமான வசதியும் கிடைக்காத ஏழை மக்கள்….  யூனிசெப் நிறுவனம் என்ன சொல்லி இருக்கிறது தெரியுமா ? இந்த தூய்மை பாரதம் என்ற ”தூய்மை இந்தியா” திட்டத்தின் காரணமாக ஏழைகளின் 50,000 ரூபாய் மிச்சமாகிறது என்று சொல்லி இருக்கிறது.

இதை பற்றி எல்லாம் காங்கிரஸை உள்ளடக்கிய எதிர் கட்சி கூட்டணிகளுக்கு நம்பிக்கை இல்லை. இங்கே தான் இருக்கிறார்கள்…  ஆனால் இவர்களுக்கு இது தெரியவில்லை. மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  நம்பிக்கை இல்லா தீர்மானம் –  அதே சமயத்தில் கருவம்… அதே சமயத்தில் நம்பிக்கையின்மை எதிர்க்கட்சிகளின் ரத்தத்தில் கலந்து இருக்கிறது.

இவர்கள் மக்களின் நம்பிக்கை பார்க்க முடியாதவர்கள். இது ஒரு சத்துருமுக அப்ரோச்.   இதற்காக தேசம் என்ன செய்ய முடியும் ? மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே….  இவர்கள் பழைய சிந்தனைகள் உடையவர்கள். நான் அந்த எண்ணங்களோடு ஒத்துப் போவதில்லை. நல்லது நடக்கும் போது வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் நல்ல உடை அணிவார்கள். அப்போது ஒரு கருப்பு பொட்டு ஒன்று வைத்துக் கொள்வார்கள். இன்று நாடு முழுவதும் நல்லது நடக்கிறது. நான்கு புறமும் வளர்ச்சி ஏற்படுகிறது. நான் உங்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஏனென்றால் நீங்கள் எங்களுக்கு கருப்பு பொட்டு வைப்பது போல், ஒரு பொட்டை வைத்திருக்கிறீர்கள். அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.