
இந்தியா முழுவதும் ரெட்ரோ ப்ரீமியம் பைக் செக்மெண்டில் புதிதாக வெளியான Triumph speed 400 மற்றும் Scrambler 400X என்ற பைக்குகள் இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. மொத்தம் பத்து நாட்களில் மட்டும் பத்தாயிரம் பேர் இந்த பைக்கை முன்பதிவு செய்துள்ளார்கள். இந்த பைக்கை முன்பதிவு செய்வதற்கு இரண்டு ஆயிரம் ரூபாய் கட்டணத்தை பஜாஜ் நிர்ணயம் செய்திருந்தது. ஆனால் தற்போது இந்த கட்டணத்தை பத்தாயிரம் ஆக உயர்த்தி இருக்கிறது.
இந்த பைக்கின் தொடக்க விலை 2.33 லட்சம் ரூபாய் முதல் ஆரம்பம். இது அக்டோபர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பைக்கை உக்ரைன் நாட்டில் இருக்கும் நிறுவனத்தின் ஆராய்ச்சி மையத்தில் வடிவமைத்துள்ளார்கள். இதனுடைய டிசைன் பெரும்பாலும் Speed Twin மற்றும் Scrambler பைக்குகளில் இருந்து அப்படியே எடுக்கப்பட்டுள்ளது.