அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் வெற்றி பெற்ற பிறகு, தனது கட்சி கொள்கைகள் எவ்வாறு செயல்பட இருக்கிறது என்பதை உலக நாடுகள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது. தற்போது உக்ரைன்- ரஷ்யா, இஸ்ரேல்-காசா இடையில், இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையிலும் போர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற வெற்றி விழாவில் உரையாற்றிய டிரம்ப் நாங்கள் சண்டையை தொடங்கப் போவதில்லை என்று கூறினார். அதோடு நாங்கள் சண்டையை நிறுத்தப் போகிறோம் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனால் உக்ரைன் ரஷ்யா இடையிலான சண்டை முடிவுக்கு வரம் என்ற எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்துடன் தொடர்பு கொள்வோம், ஆனால் எங்களுடைய நிலைமைகள் மாறாது. ரஷ்யா தனது நாட்டிற்கான நலனில் உறுதியாக இருக்கிறது. உக்கிரேன் மோதலில் எங்களுடைய இலக்கு அடையும் வரை நாங்கள் செயல்படுவோம் என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம் உக்கிரனுக்கு எதிராக போர் தொடரும் என்று ரஷ்யா மறைமுகமாக தெரிவித்துள்ளது.