அமெரிக்காவின் அதிபர் ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்று பல செயல்களை மேற்கொண்டு வரும் நிலையில் தற்போது வெளிவரும் ஒரு தகவல் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது டிரம்ப் அதிபராக பொறுப்பேற்கும் போதே கல்வி துறையை கலைக்கும் பணிகளை மேற்கொண்டு வந்துள்ளார். அமெரிக்க காங்கிரஸ் ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு ஒப்புக்கொள்ளவில்லை. இந்நிலையில் அமெரிக்காவில் நடைபெற்ற மாகாண ஆளுநர்கள் மற்றும் கல்வி ஆணையர்கள் கூட்டத்தில் தற்போது டிரம்ப் கல்வித் துறையை கலைக்கும் ஆவணங்களில் கையெழுத்திட உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதைத் தொடர்ந்து கல்வி துறையின் கீழ் 1 லட்சம் அரசு பள்ளிகள் மற்றும் 34,000 தனியார் பள்ளிகள் செயல்பட்டு வரும் நிலையில் ட்ரம்பின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புகள் கிளம்பி உள்ளது. மேலும் கல்வியின் தரத்தை கண்காணிக்கும் துறையை எப்படி கலைக்க முடியும் என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்கிடையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் நிதியையும், சிறந்த மாணவர்களுக்கான திட்டங்களையும் அமெரிக்க அரசு தொடர்ந்து வழங்கிக் கொண்டே இருக்கும் என கல்வித்துறை செயலாளர் விளக்கம் அளித்துள்ளார்.