
சின்ன சின்ன நிகழ்வுகள் உங்களது நட்பை எப்படி பலப்படுத்துகிறது என்பது குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
நண்பர்கள் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். தங்களுடைய வாழ்க்கையில் நடக்கக்கூடிய இன்பத் துன்பங்கள் என அனைத்தையும் பகிரக் கூடிய ஒரே ஒரு இடம் நட்பிடம் மட்டும்தான். அனைவருக்கும் ஒரு நண்பன் இருப்பான். அவனுக்கு மட்டுமே நம்முடைய நேர்மறையான பகுதியும், எதிர்மறையான பகுதியும்தெரிந்திருக்கும். அப்படியான நண்பனுடன் பலமுறை நாம் வெளியே சென்று இருப்போம். பல நினைவுகள் பகிர்ந்திருப்போம். எவ்வளவு நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் சரி, ஒரு கட்டத்தில் முன்பு பேசியது போல் பழகியது போல் இப்போது இல்லையே என்ற எண்ணம் ஒரு முறையாவது வந்து செல்லும்.

அப்படி வருகையில், நட்பில் விரிசல் விழாமல் எப்போதும் போல் அதை கொண்டு செல்வதற்கு நீங்கள் ஏதாவது முயற்சிகள் எடுத்தது உண்டா ? இல்லையெனில், உங்களுக்கு ஒரு சின்ன டிப்ஸ். உங்களுடைய நண்பருடன் அல்லது நண்பர்களுடன் வெளியே செல்லும்போது எங்காவது சாப்பிட செல்லுங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான உணவை ஆர்டர் செய்வார்கள். நீங்கள் உங்களுக்குப் பிடித்த உணவை ஆர்டர் செய்வீர்கள்.
நீங்கள் ஆர்டர் செய்த உணவை உங்கள் நண்பர்கள் அனைவருடனும் பகிர்ந்து சாப்பிடுங்கள். அவர்கள் அவர்களுக்கு பிடித்த உணவை ஆர்டர் செய்திருப்பார்கள். அதை அவர்கள் உங்களோடு பகிர்ந்து கொள்வார்கள். அந்த உணவு உங்களுக்கு பிடித்த உணவாக இருக்கலாம் அல்லது பிடிக்காத உணவாக கூட இருக்கலாம். எது எப்படியோ உங்கள் நண்பன் அன்பினால் பகிர்ந்ததை மறுக்காமல் சாப்பிடுவீர்கள்.

இந்த அனுபவம் உங்களுக்கு வித்தியாசமான நேர்மறையான எண்ணங்களை கண்டிப்பாக அளிக்கும். நண்பர்களிடையே தீர்க்கவே முடியாத சண்டையாக இருந்தாலும் கூட இப்படியான சின்ன சின்ன விஷயங்கள் மீண்டும் பழைய படியான நட்பு வாழ்க்கையை அவர்களுக்கு மீட்டுத் தர பெரிதும் உதவும். கசப்பான நிகழ்வுகளை மனசுல வச்சுக்கிட்டு பேசாம இருக்கும் உங்க நண்பர்கள் கிட்ட இத முயற்சி செஞ்சி பாருங்க.