
ஆ.ம.மு.க கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசியதாவது, அதிமுக கட்சியின் தொண்டர்கள் தங்களை தாங்களே ஏமாற்றிக் கொண்டு எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துக் கொண்டிருக்கிறார்.
2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிச்சாமி கண்டிப்பாக அதிமுக கட்சிக்கு முடிவுரை எழுதி விடுவார். எடப்பாடி பழனிச்சாமி திமுகவுடன் கள்ளக் கூட்டணி வைத்துள்ளார் இதனால் தான் நாடாளுமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் அதற்கு தகுந்தவாறு வேட்பாளரை நிறுத்தினார்.
திமுகவிற்கு எதிராக எம்ஜிஆர் கண்டுபிடித்த வெற்றி சின்னமான இரட்டை இலை தற்போது திமுகவிற்கு மறைமுகமாக வெற்றி பெற பயன்படுகிறது. இது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.